தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 13, 2019, 8:06 PM IST

ETV Bharat / state

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஈரோடு: காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த இருவருக்கு வனத்துறையினர் ரூ.50ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட ராமபைலூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புளியமரக்கொடிக்கால் என்ற இடத்தில் இருவர் காட்டுபன்றியை வேட்டையாடி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து இறைச்சியை பறிமுதல் செய்த அலுவலர்கள், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் ராமபைலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்(55), சவுந்தரராஜன்(35) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் இருவரையும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ABOUT THE AUTHOR

...view details