ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தூ.நா.பாளையம் வனச்சரகம் பங்களாபுதூர் வனப்பிரிவு பங்களாபுதூர் காவல் சுற்று எடகாஞ்சி சராகத்திற்குட்பட்ட எடகாஞ்சி கிணறு வனப்பகுதியில் வன விலங்குகள் மற்றும் வெளிஆட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கேமரா வனத்துறையினரால் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி கேமராவை கடந்த 7ஆம் தேதி அன்று வனத்துறையினர் சோதனை செய்தபோது இரண்டு உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐந்து நபர்கள் வனப்பகுதிக்குள் எடகாஞ்சி குட்டையின் வழியாக செல்வது பதிவாகி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் பதிவான பதிவுகளின் அடிப்படையில் பங்களாபுதூர் வனப்பிரிவு வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.