தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: இந்தாண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக 2,472 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan interview
sengottaiyan interview

By

Published : Dec 1, 2019, 9:57 PM IST

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் உள்ள குருமந்தூர், நம்பியூர், மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம் என 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ. 50 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சிப் பணிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொகுதி வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவைத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இதுமட்டுமின்றி புதிதாக 2,472 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அனைத்து ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளதால் இனி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது.

ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்குத் தொடர்ந்துவருகின்றனர். இனி அதை தவிர்க்க ஆசிரியர் தகுதி தேர்வாணையத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்ய முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களை அழைத்துள்ளோம். செயல்பாட்டில் இல்லாத பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விட்டதால் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு திமுக தேர்தலை சந்திக்கட்டும் - அமைச்சர் தங்கமணி!

ABOUT THE AUTHOR

...view details