ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப் 2) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பவானி ஆற்று பாலத்தில் அருகே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 2 தரப்பு மோதல் - விநாயகர் சிலை
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருகுழுவினருக்கு தள்ளுமுள்ளு
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பின் கூடுதல் போலீசார் வரவழைக்குப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் லோன் ஆப்... ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி வரை மோசடி...