தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோதி பாக்கலாம் வாடா... சண்டையிடும் மான்கள் - வைரல் காணொலி! - sathyamangalam forest dear fight video

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இரண்டு புள்ளிமான்கள் சண்டையிட்டுக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது.

video
video

By

Published : Jul 25, 2020, 10:35 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக, புள்ளிமான்கள் இங்கு அதிக அளவில் இருக்கின்றன. பண்ணாரி, ஆசனூர், பவானிசாகர் வனப்பகுதிகளில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், பவானிசாகரிலிருந்து தெங்குமரஹடா செல்லும் வன சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில், கொம்புகளுடன் கூடிய இரண்டு ஆண் புள்ளிமான்கள் தங்களது கொம்புகளால் தலையை முட்டி செல்லமாக சண்டையிட்டுக்கொண்டன. புள்ளி மான்கள் சண்டையிட்ட போது அவ்வழியே ஒரு வாகனம் சென்றதால் அதிர்ச்சி அடைந்த மான்கள், வாகனத்தைக் கண்டு மிரட்சியுடன் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தன.

இரண்டு ஆண் புள்ளிமான்கள் கொம்புகளுடன் தலையை முட்டி சண்டையிடும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

நீயா... நானா... முட்டிமோதும் மான்கள்

இதையும் படிங்க:கலிபோர்னியாவில் பிறந்த அரியவகை சிறுத்தை குட்டிகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details