தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த இரு வேட்பாளர்கள்!

ஈரோட்டில் உள்ள நகராட்சி வார்டுகளில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

Two Candidates in Erode Municipality won by Single Vote Difference
Two Candidates in Erode Municipality won by Single Vote Difference

By

Published : Feb 22, 2022, 7:16 PM IST

ஈரோடு:நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக பெரும்பான்மை பெற்று நான்கு நகராட்சிகளையும் கைப்பற்றியது. பவானி நகராட்சியில் 2ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மோகன்ராஜ் 435 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அவருக்கு அடுத்த இடம் வந்த அதிமுக வேட்பாளர் விஜயகுமாரி 434 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மோகன்ராஜுக்கு அஞ்சல் வாக்கினால் இந்த வெற்றியைப் பெற்றார்.

அதேபோன்று, சத்தியமங்கலம் நகராட்சியில் 8ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா 256 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகளையும் பெற்றனர். ஒரே ஒரு அஞ்சல் வாக்கில் பாஜக வேட்பாளர் உமா வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: மணப்பாறை வெற்றி வாகை சூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தம்பதி

ABOUT THE AUTHOR

...view details