தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத் திருட்டு - இரண்டு சிறுவர்கள் நீதிக்குழுமத்தில் ஆஜர் - latest crime news eroad

ஈரோடு: பொன்னம்பாளையம் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

erode

By

Published : Sep 21, 2019, 5:49 PM IST

ஈரோடு பொன்னம்பாளையம் தமிழ்நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி(50). கடந்த 9ஆம் தேதி இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மறுநாள் காலை பார்த்தபோது காணாமல் போனது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் புஞ்சைபுளியம்படி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் புதுப்பாளையம் பிரிவு ரோடு அருகே இரண்டு சிறுவர்கள் சந்தேகிக்கத்தக்க வகையில் இருசக்கர வாகனம் வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்குச் சென்று அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோயில் பகுதியை சேர்ந்த ரோகித்(16), விஜயராஜ்(14) என்பதும் இருவரும் சேர்ந்து வேலுச்சாமியின் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து ஈரோடு சிறுவர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். நீதிக்குழுமத்தின் உத்தரவின் பேரில் இருவரும் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க

அம்மன் கோயிலையே குறிவைத்து திருடும் 4 திருடர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details