ஈரோடு:சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து திப்பு சுல்தான் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது தப்பியோட முயன்றனர்.
அவர்களை துரத்திப்பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து இரு நோட்டில் நெம்பர் எழுதிய சீட்டுகள், ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.