ஈரோடு:அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், காவல் துறையினர், இன்று (செப்.20) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த காய்கறி வண்டியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் காய்கறிகளுக்கு நடுவே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் ஆறு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இக்கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த வாகன ஓட்டுநர் மோகித் (26), செல்வராஜ் (25) இருவரையும் கைது செய்தனர், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.