ஈரோடு:மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வந்தனர். அப்போது அரச்சலூர் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் பேரில் வீட்டின் உரிமையாளர் பாலா மற்றும் அவரது நண்பர் அஜீத், ஜமீர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவிலிருந்து கடத்தல்... வீட்டில் வைத்து விற்பனை... 3 பேர் கைது... - Ganja sales start in Modakurichi
ஈரோடு அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து வீட்டில் வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்!
முதல்கட்ட விசாரணையில், ஆந்திராவில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி அங்கிருந்து மீன் லோடு வரும் லாரியில், மீன் பெட்டிகளுக்கிடையே கஞ்சாவை வைத்து கடத்திவந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அதை வீட்டில் பதுக்கி சிறு பொட்டலங்களாக மாற்றி ஈரோட்டில் சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்!!