ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் 21ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரித் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில், பொறியியல் இளங்கலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளுக்கான பட்டங்களை தொழிலதிபர் வேணுகோபால் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்கா உருவாக்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், அமேசான், டெஸ்லா, ஊபர் போன்ற தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்திவருகிறோம். இதனால்தான் அமெரிக்கா வல்லரசாக உள்ளது.
இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்தை நம் இந்திய மாணவர்கள் உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. கல்விக்கு எல்லையில்லாத நிலையில் மாறிவரும் தற்காலத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பட்டம் படிக்கும் மாணவர்கள் சமுதாய சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.