தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கலுக்கு மஞ்சள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி - turmeric prices increase in Erode

ஈரோடு: பொங்கல் பண்டிகைக்கு முக்கியத் தேவையான மஞ்சளின் விலை அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
மஞ்சள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Jan 14, 2020, 3:14 PM IST

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, கனகபுரம் பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொங்கலுக்காக அதிகமாக சாகுபடி செய்யப்படும் மஞ்சள் நன்றாக விளைந்து காய்வதற்கு முன்னர் மஞ்சள் கொத்துக்காக நிலத்திலிருந்து பிடுங்கி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பாரம்பரியமான பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது சூரியனுக்கு நன்றி செலுத்திடும் வகையில் பொங்கல் சூர்ய வழிபாட்டு படையலுக்கு மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளுடன் வழிபடுவது வழக்கம். சூரிய வழிபாட்டிற்கு முக்கியப் பொருளாக விளங்கும் மஞ்சள் கொத்தின் விலை கடந்தாண்டை விடவும் இந்தாண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஞ்சள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்தாண்டு 40 மஞ்சள் கொம்புகளைக் கொண்ட ஒரு கட்டு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், இந்தாண்டு விற்பனையின் தொடக்க நாளிலேயே 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: பரமக்குடியில் மஞ்சள் அறுவடை தீவிரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details