தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சள் மாநகரத்திற்கு குட் நியூஸ்! 10 ஆண்டுகளுக்குப் பின் உயர்ந்த மஞ்சள் விலை;விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி - 10000 rupees turmeric

பல ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற ஈரோடு மாவட்ட மஞ்சளின் விலை 10 ஆயிரத்தை எட்டி உள்ளது என்றும்; மஞ்சள் விவசாயிகள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Turmeric price rise after 10 years
0 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்துள்ளது மஞ்சள் விலை

By

Published : Jul 12, 2023, 1:31 PM IST

10 ஆண்டுகளுக்குப் பின் உயர்ந்துள்ளது மஞ்சள் விலை

ஈரோடு: விவசாயத்திலும் ஜவுளித்துறையிலும் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது, ஈரோடு. குறிப்பாக இவ்மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு 'மஞ்சள் மாநகரம்' என்ற பெயரும் உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் விளைந்தாலும், ஈரோடு மஞ்சளின் மகிமை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்புச் சக்தி, தரம் உள்ளிட்ட தனித்தன்மை வேறு எந்த பகுதியில் விளையும் மஞ்சளுக்கும் இருப்பது இல்லை. குறிப்பாக, ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால், உணவு பயன்பாட்டை தாண்டிலும் மருத்துவத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால் ஈரோடு மாவட்ட மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி, கொடுமுடி, அரச்சலூர், வெள்ளாடு, கோபி, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்டப் பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:நூற்றாண்டை கொண்டாடும் கோலி சோடா..! - அடேங்கப்பா இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறா..?

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 5000 முதல் 6500 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு மஞ்சள் சந்தைகளில் மஞ்சளுக்கான டிமாண்ட் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் சந்தைகளில் மஞ்சள் ஏற்றுமதியானது அதிகரித்து விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

இதனையடுத்து ஈரோடு மாவட்ட மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்க முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது, “குறிப்பாக விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு 9500 முதல் 10,500 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டாலுக்கு 8000 முதல் 9000 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இது கடந்த 10 ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது.

அதிக விளைச்சல் இருந்த போது விலை குறைவாக இருந்ததாகவும் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. புவியியல் மாற்றத்தின் காரணமாக இந்தாண்டு மழை குறைவாக பெய்யும் என்கிற காரணத்தாலும் அடுத்த ஆண்டு(2024) மஞ்சள் பற்றாக்குறை வரும் என்கிற காரணத்தினாலும் மஞ்சள் விலையானது உயர்ந்து கொண்டே இருக்கிறது” எனக் கூறினார்

மேலும் எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவிற்கு 23 லட்சம் மூட்டைகள் மஞ்சள் ஏற்றுமதியாகி உள்ளதாகவும் இன்னும் வரும் காலங்களில் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும்; மஞ்சள் டிமாண்ட் அதிகமாக உள்ளதால் இன்னும் விலை உயரவும் வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விலை ஏற்றமானது மஞ்சள் விவசாயிகள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details