தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் - Cane should not be given to an elephant

யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ஆசனூர் வனத்துறை ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

By

Published : Dec 4, 2022, 10:40 PM IST

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகா இடையே செல்லும் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூர் வனப்பகுதி சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால் யானைகளைக் கட்டுப்படுத்த, கரும்புலாரி ஓட்டுநர்கள் யானைக்கு கரும்பு வழங்கக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து வந்த கர்நாடக லாரி ஓட்டுநர் சித்தராஜ் காராப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே நின்றுகொண்டிருந்த காட்டுயானைக்கு கரும்பு கொடுத்ததைப் பார்த்த வனத்துறையினர், அவரைப் பிடித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவேந்திரா மீனா முன் ஆஜர்படுத்தினர்.

யானைக்கு கரும்பு கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஓட்டுநர் சித்தராஜூவுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'காசி தமிழ்ச் சங்கமம் விழா தமிழர்களை ஏமாற்றும் வேலை' - ஜவாஹிருல்லா

ABOUT THE AUTHOR

...view details