தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள்!

ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் பிரசவத்திற்காக பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

tribal-people-carried-the-woman-to-the-cradle-for-delivery
tribal-people-carried-the-woman-to-the-cradle-for-delivery

By

Published : Dec 4, 2019, 2:19 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் சுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் - குமாரி தம்பதி. குமாரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பிரசவ வலி எற்பட்டவுடன் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர்.

ஆனால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலையானது மழையின் காரணமாக மிகவும் மோசமடைந்து இருப்பதால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தால் அங்கே செல்ல முடியவில்லை.

பிரசவத்திற்காக பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மலைக் கிராம மக்கள்

இதனால் அப்பகுதி கிராமமக்கள் குமாரியை தொட்டில் கட்டி சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுமந்துசென்றனர், அதன்பிறகு சரக்கு வாகனம் மூலம் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பர்கூர் செல்லும் வழியில் சரக்கு வாகனத்திலேயே குமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை - பொதுமக்கள் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details