ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் கே.என்.பாளையம் வரையுள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோர மரங்கள் வலுவிழந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் நின்றன.
மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு! - kadambur
ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைப்பாதை
இந்நிலையில், கடம்பூர் 11-ஆவது மைல் எனப்படும் மலைப்பாதையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழும்போது எந்த வாகனமும் அப்பகுதியில் பயணிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.