தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி : அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - Erode corona symptom

ஈரோடு: வடமாநில இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமாநில இளைஞருக்கு கரானா வைரஸ் அறிகுறி
வடமாநில இளைஞருக்கு கரானா வைரஸ் அறிகுறி

By

Published : Mar 21, 2020, 9:15 AM IST

உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த 24 பேரை மருத்துவத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர்.

வடமாநில இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி

அதில் இருவருக்கு காய்ச்சல் இருந்ததை உறுதி செய்து ஒருவரை பெந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொருவரை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details