ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வரை பதிவுசெய்யப்பட்ட அரசுப் பேருந்துகள், ஆம்னி, பள்ளி, கல்லூரி பேருந்துகள், தனியார் நிறுவன பேருந்துகள் இல்லாமல் சிறிய, பெரிய கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் என 47 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவல் துறையின் வாகனத் தணிக்கையினை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவில் பயணிகள், சரக்குகளை ஏற்றிச் சென்றாலும் அதிக அளவில் பாரம் ஏற்றியதாக வழக்குப்பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது.
மேலும், 7 ஆயிரத்து 500 கிலோ எடைக்கு குறைவான எடையுள்ள வாகனங்களை இயக்குபவர்களுக்கு பேட்ஜ் தேவையில்லை என்ற போதிலும் பேட்ஜ் இல்லை என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர்.