ஈரோடு: பெருந்துறை அடுத்த தோப்புபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் - ஜோதி தம்பதியினரின் 22 வயது மகள் சுமித்ரா.
கடந்த 2017-ம் ஆண்டு சுமித்ரா பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரத தாஸ் என்பவரை காதலித்துள்ளார்.
பின்னர் பெற்றோருக்குத் தெரியாமல் சுப்ரத தாஸ், சுமித்ராவை கொல்கத்தா அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பெற்றோரைத் தொடர்பு கொண்ட சுமித்ரா, கொல்கத்தாவில் சுப்ரததாஸ் தன்னை வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்துவதாகவும், உணவில் எச்சில் மற்றும் சிறுநீரை கலந்து கொடுத்து உண்ணச்சொல்வதுடன், தன்னை நண்பர்களுக்கு பாலியல் விருந்தாக்க முயற்சிப்பதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.
காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகார் மேலும் தன்னை மீட்டுச்செல்லுமாறு வீடியோ பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த பெற்றோர், மகளை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய பெருந்துறை காவல் துறையினர், அவரை மீட்பதற்காக மேற்குவங்கம் சென்றுள்ளனர்.
சிறுநீர் கலந்த உணவு - காதலை நம்பி கொல்கத்தா சென்ற ஈரோடு பெண்ணுக்கு கொடுமை! இதையும் படிங்க:பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்