தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்ற கார்? - ஓட்டுநருக்கு நோட்டீஸ்!

சத்தியமங்கலம் அருகே கார் ஒன்று ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்றதாக எழுந்த புகாரில், கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Traffic
Traffic

By

Published : Feb 9, 2023, 8:37 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு, தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த இனோவா கார் ஒன்று, இடது புறமாக செல்லாமல் நடுரோட்டில் சென்றது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டும் வழி விடாமல் வேகமாகவும் சென்றது. அந்த கார், தொடர்ந்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

வேகமாக சென்ற காரை முந்தி செல்ல முடியாமல் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தடுமாறினார். ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் கார் வேகமாக சென்றதை தனியார் ஆம்புலன்ஸ் உதவியாளர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமியிடம் கேட்டபோது, "ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் வந்தது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய இருவரும் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 73 ரயில் நிலையங்களுக்கு அடித்தது லக்: பட்டியலில் உங்கள் ஊர் இருக்கா பாருங்க!

ABOUT THE AUTHOR

...view details