தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறாவளிக் காற்றால் முறிந்து விழுந்த மரங்கள்; போக்குவரத்து பாதிப்பு! - coimbatore

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே நேற்று வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் மரம் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

By

Published : Jun 8, 2019, 5:03 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நேற்று முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதில் நல்லூர் மாதேஸ்வரன் கோயில் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. அதன் காரணமாக நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சைபுளியம்பட்டி காவலர்கள், வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மரம் முறிந்து விழுந்ததால் சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளான தேசிய நெடுஞ்சாலை

ABOUT THE AUTHOR

...view details