ஈரோடு: சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்ததால் பயிர்கள் சாகுபடி செய்யாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாள்களாக மழை குறைந்துள்ளதால் தற்போது வேளாண் நிலங்களில் உழவுப்பணி தீவிரமடைந்துள்ளது. டிராக்டர்களைப் பயன்படுத்தி தற்போது உழவுப்பணி நடைபெற்றுவருகிறது.
அதன்படி டிராக்டரில் உழவு செய்ய ஒரு மணி நேரம் வாடகை ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக 200 ரூபாய் உயர்ந்து தற்போது ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர், டில்லர் போன்ற இயந்திரங்களுக்கு தமிழ்நாடு அரசு வேளாண் துறை சார்பில் டீசல் மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்