தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - The dam park is situated in an area of 15 acres in front of Bhavanisagar Dam

ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை பூங்காவில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Etv Bharatபவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் குவித்தனர்..!
Etv Bharatபவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் குவித்தனர்..!

By

Published : Aug 3, 2022, 10:11 PM IST

ஈரோடு:ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள்

இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு என்பதால் பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

பூங்கா முன்பு பொதுப்பணித்துறையினர் வழங்கிய நுழைவுச்சீட்டை பெற்றுக் கொண்டு பூங்காவிற்குள் சென்று சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமியர் ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுது போக்கினர்.

பண்டிகை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் அணை முன்புறம் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் - மெட்ரோ ரயில்வே இயக்குநர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details