ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முன்புறம் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி பூங்கா முதல் மூடப்பட்டது. ஆனால் இதனை அறியாமல், இன்று (ஏப்ரல்.14) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றம் அடைந்தனர்.