ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடுப்படும் தண்ணீர் பெரிய கொடிவேரி அணை வழியாக பவானி, காவிரி ஆற்றை சென்றடைகிறது. பெரிய கொடிவேரி அணை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அந்த வகையில் வாரவிடுமுறை என்பதால் கூடுதலாக அணையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக அணையில் நிறைந்துள்ளனர். ஆழமாக பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.