ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றாலா பயனிகள் விடுமுறை தினங்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பலவேறு மாவட்டங்களிலிருந்தும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபட்டு வந்தது.
இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயனிகள் அணையில் குளிக்கவோ, மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயணம் மேற்கொள்ளவோ, பொதுபணிதுறை தடை விதித்திருந்தது.