ஈரோடு மாட்டம் சத்தியமங்கலம் அடுத்த முடுக்கன்துறை ஊராட்சியைச் சேர்ந்த நெசவு தொழிலாளி ராஜசேகரன் என்பவரது மகள் சம்சிகா. இந்தாண்டு தொட்டம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற இவர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் இ - பாக்ஸ் பயிற்சி மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வு எழுதினார்.
நீட் தேர்வு முடிவில் இவர் 284 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதியவர்களில் சம்சிகா மாநில அளவில் 22ஆவது இடம் பிடித்துள்ளார்.