ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. மேலும் சாலையில் ஏற்பட்ட குழி காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
மழையால் சாலையில் பிரேக் பிடிக்காமல் தக்காளி வாகனம் கவிழ்ந்து விபத்து - தக்காளி வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், அங்கு பெய்த மழை காரணமாக பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

tomato
தக்காளி வாகனம் கவிழ்ந்து விபத்து
இந்நிலையில், கோயம்புத்தூருக்கு தக்காளி ஏற்றி சரக்கு வாகனம் செண்பகபுதூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தை ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ராஜ் பிரேக் அடித்துள்ளார்.
இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக ராஜ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில், 35 தக்காளி கூடைகள் கீழே விழுந்து நசுங்கின. சரக்கு வாகனத்தை கிரேன் உதவியுடன் மீட்டனர்.