ஈரோடு நேதாஜி தினசரி காய்கறிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் தக்காளி, ஈரோடு மாவட்டத்தின் மலைப் பகுதிகளான தாளவாடி, பர்கூர் பகுதிகளிலிருந்தும், சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருமண காலங்கள் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் தக்காளியின் தேவை அதிகரிக்கும் என்பதால் அவ்வப்போது ஆந்திராவிலிருந்தும் தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது.
இதற்கிடையே, கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தக்காளியின் தேவை வெகுவாகக் குறைந்தது. இதனால் உள்ளூர் தக்காளிகள் மட்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.