ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தீயணைப்பு நிலையம், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள், கால்நடை தீவன தொழிற்சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மஞ்சள் வணிக வளாகம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான உறுதிமொழிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன், “பெருந்துறை சிப்காட் வளாகத்தில் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றி நீர் நிலைகளில் கலக்கச் செய்யும் ஆலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மூலம் குழு அமைக்க உறுதிமொழி குழு பரிந்துரை செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யலாறு மற்ற நீர்நிலையை அதிக அளவிலான டிடிஎஸ் சுமார் 7 ஆயிரம் வரை இருப்பதாக துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.