தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு! - பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் சென்னசமுத்திரம் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 11:08 PM IST

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டப் பணிகள் தொடங்கி 11 இடங்களில் மட்டுமே சீரமைப்பு செய்ய வேண்டும், புதிய கட்டுமான பணிகளை தொடங்க கூடாது அவ்வாறு தொடங்கிய பகுதிகளை அந்தந்த பகுதி ஆயக்கட்டு விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் தொடங்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து கேட்டுதான் எந்த திட்டமாக இருந்தால் கொண்டு வரப்படும் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அதனை நிறைவேற்ற வேண்டும் கீழ்பவானி பாசன கால்வாயை பாதுகாக்க சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டம் அமைக்கும் கட்டுமான நிறுவனமும் பொதுப்பணி துறையும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி 11 இடங்களுக்கு மேலாக தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பு என்பது கேள்விக்குறியாகிது.

இந்நிலையில் கீழ்பவானி கால்வாயில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அளித்த உத்தரவின் படி ஆக்ஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும். கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276 ரத்து செய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் கீழ்பவானி பாசன நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 11) ஈடுபட்டனர்.

இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான கால்வாய் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. கீழ்பவானி பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் சென்னசமுத்திரம் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதையும் படிங்க:மாநகரை மிரட்டும் மாடுகள்.. தீர்வு என்ன?

ABOUT THE AUTHOR

...view details