ஈரோடு மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஈரோடு தீயணைப்புத்துறையினர் 40 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், ஏனைய மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வீதி வீதியாக வீடு வீடாக தெருவாரியாக தீயை அணைக்கப் பயன்படுத்தும் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.