சத்தியமங்கலம் பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் அழகிற்காகவும், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், நடப்பட்ட மரங்கள் ஒவ்வொரு பருவகாலங்களிலும் பூத்து குலுங்குகின்றன. இப்பகுதியில் மே பிளவர் மரங்கள் அதிகளவில் உள்ளன. கோடை காலத்தில் மலரும் மே பிளவர், தற்போது தாளவாடியில் பூத்து குலுங்குகின்றன. பச்சை நிற இலைகளுக்கு மத்தியில், சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சாலையின் இருபுறமுகம் அமைந்துள்ள மே பிளவர் மரங்கள் கைகோர்த்து மேகத்தை மறைத்தபடி வரிசையாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்து மர நிழலில் இளைப்பாறுகின்றனர்.
தாளவாடி சாலையோரத்தில் பூத்துக் குலுங்கும் மே பிளவர் - selfie
ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் சாலையோரத்தில் பூத்துக் குலுங்கும் மே பிளவர் வாகன ஓட்டிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
தாளவாடி சாலையோரத்தில் பூத்துக்குலுங்கும் மே பிளவர்
சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மரங்களின் நடுவே பயணிப்போர் மரங்களில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசித்தபடி செல்கின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மே பிளவர் மரத்தின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.கோடை கால வறட்சியில் சிக்கி உள்ள தாளவாடி வனப்பகுதியில் இந்த வண்ணமயமான மலர்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.