தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 கால்களுடன் உலாவரும் அதிசய ஆடு! - ஆடு

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மூன்று கால்களுடன் இயல்பாக உலாவும் ஆடு, தனது செயல்களால் அந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. !

3 கால்களுடன் உலாவும் அதிசய ஆட்டுக்குட்டி!

By

Published : May 14, 2019, 1:36 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையப்பன் . இவர் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்துவருகிறார். இவருடைய வெள்ளாடு ஒன்று, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் அந்த குட்டி மூன்று கால்களுடன் அதிசயமாக பிறந்தது. அதாவது பின்னங்காலில் ஒரு கால் மட்டுமே அதற்கு உள்ளது. இதைக்கண்ட வெள்ளையப்பன் அதிர்ச்சி அடைந்தார். சில நாட்களில் அது இறந்து விடுமோ? என்று அச்சமும் அவருக்கு எழுந்தது. ஆனால் அந்த வெள்ளாட்டுக் குட்டி இயற்கையின் பரிசாக நல்ல உடல் நலத்துடன் சக ஆடுகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிவருகிறது.

3 கால்களுடன் நடந்து சென்று தீவனம் மேய்வது, தண்ணீர் குடிப்பது என்று தன்னுடைய அடிப்படைத் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்கிறது. மேலும் தாயிடம் சென்று எந்தப் பிரச்னையும் இல்லாமல் பால் குடிக்கிறது. இதனால் மலை கிராம மக்களை இந்த ஆட்டுக்குட்டி ஈர்த்துள்ளது. ஆட்டுக்குட்டியின் பின்னங்காலில் ஒரு கால் மட்டும் இருந்தாலும் தன்னுடைய உடல் எடையை தாங்கியபடி நடந்து செல்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details