தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறையிசை நடனமாடி கல்வி விழிப்புணர்வு! - dance music

சத்தியமங்கலம் : தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட, பள்ளிச் சேர்க்கையை வலியுறுத்தும் பிரசாரத்தில், பறையிசை நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பள்ளி சேர்க்கை பிரச்சாரத்தில் பறை இசை நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைக்குழுவினர்

By

Published : May 29, 2019, 10:10 AM IST

சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன்பு, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் பள்ளிச் சேர்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளிப்படிப்பில் இடைநின்றவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்து தப்பாட்டம், பறையிசை நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பறையிசை நடனமாடி கல்வி விழிப்புணர்வு!

கல்வி உரிமைச் சட்டத்தின் படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை கட்டாயமாக்கியுள்ளதால், இடைநிற்றலைத் தடுக்க இந்த விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிராமங்களில் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details