ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 பேருக்கு மேல் எந்த விழாவிலும் பங்கேற்ககூடாது என தடை உத்தரவு உள்ளதால் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
எளிமையாக நடந்த தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா! - சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 264 வது பிறந்த நாள் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
எளிமையாக நடந்த சுதந்திர போராட்ட தியாகி தீரன் பிறந்த நாள் விழா!
தீரன் சின்னமலையின் பிறந்த ஊரான அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அமைந்துள்ள அவரின் மணிமண்டபத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.