ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக இப்பகுதியில் மலரா, சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளதால் தினந்தோறும் தோட்டத்தில் சாகுபடியாகும் பூக்களைப் பறித்து, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் ஏலம் விடுவது வழக்கமாக நடைபெறுகிறது.
அதுமட்டுமில்லாமல் அங்கு விளையும் பூக்கள் கேரளா, கர்நாடகத்துக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரோனா நோய் பரவல் காரணமாகக் கர்நாடகம், கேரளாவில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பூக்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் பூ கடைகள் குறைந்த நேரத்தில் செயல்படுவதால் பூக்கள் விற்பனையும் சரிந்துள்ளது.