ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காந்திநகர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் உடலிலிருந்து தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
யானை தந்தங்கள் திருட்டு: தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்! - Squard dog
ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் இறந்துகிடந்த ஆண்யானையின் தந்தங்களை வெட்டி கடத்தியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டபிறகு, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இறந்த யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார். சோதனையின் முடிவில் இறந்து கிடந்த யானை குடற்புழு நோய் தாக்கி இறந்துள்ளதாக தெரிவித்தார். யானையின் உடல் அதேபகுதியில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், யானையின் தந்தங்களை திருடியவர்களைக் கண்டறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், யானை இறந்து கிடந்த இடத்திலிருந்து காந்திநகர் கிராமம் வரை ஓடி நின்றது. இது குறித்து வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டபோது யானையின் தந்தங்களை வெட்டிக் கடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக தெரிவித்தனர்.