ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம் மூலம் வாணிப்புத்தூர், டிஎன் பாளையம், கொங்கர்பாளையம், கள்ளியங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்து 495 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் புன்செய் பாசனமான வாழை, தென்னை, மல்லிகைப்பூ மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு: விவசாயிகள் மகிழ்ச்சி! - water
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மழை பெய்யாததால் வாடிய பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வலது மற்றும் இடது கரை வாய்க்கால் மூலம் சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.