தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருந்துறை சிப்காட் விவகாரம்: "தண்ணீர் மட்டும் அல்ல, காற்றும் மாசடைந்துள்ளது" - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு! - காற்று மாசு

Perundurai SIPCOT Issue: ஈரோடு பெருந்துரை பகுதியில் புது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வரை தொழில் நிறுவனங்கள் செயல்பட கூடாது. சிப்காட் பகுதியில் தண்ணீர் மட்டும் மாசடையவில்லை, காற்றும் மாசடைந்துள்ளது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

SIPCOT Issue
சிப்காட் விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 9:25 AM IST

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டி

ஈரோடு:பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் பாதிக்கப்படும் பாலதொழுது குளம், எளையாம்பாளையம் குளம், ஓடைக்காட்டூர் குளம் ஆகியவற்றை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, தண்ணியின் உப்பு தன்மையை கண்டறிந்தார். மேலும் தோல் பதனிடும் பொதுசுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, அங்கு இருக்கும் திடக்கழிவுகளை உடனடியாக கும்மிடிப்பூண்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரன், "பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள கிராமங்களை அழித்து வருகிறது. சிப்காட் தொழிற்சாலைகளால் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

2009 ஆண்டு இந்த தொழிற்சாலைகளில் இருந்து நீடித்து வரும் பிரச்சனைக்கு விரிவாக்கம் செய்வதற்காக 1,300 ஏக்கர் விரிவாக்கம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டு சிப்காட் விரிவாக்கத்தை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். கோககோலா கம்பெனி வருவதாக கூறி மக்களுக்கு பெரிய பிரச்சனை கொடுக்கப்பட்டது.

இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பாதுகாப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டு 112 நாட்களாக போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்தின் விளைவாக அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஆய்வு செய்தனர். விரைவில் புது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்துள்ளனர். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மட்டுமே மக்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சுற்றி இருக்கின்ற அனைத்து பகுதிகளும் நீர் வளம், மண் வளம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக கழிவுநீர்கள் நிலத்தடியில் விடாமல் இருந்தால் இந்த பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இந்த பகுதியில் புது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் போதாது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சிப்காட் அதிகாரிகள் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தாலும் அது பயன்இல்லை.

இந்த ஊருக்கு ஏதேனும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்தால் அவர்களை குடும்பத்தோடு இந்த பகுதியில் தங்க வைத்து அவர்களுக்கு இந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். கழிவுநீர் பிரச்சனைக்கு தொழிற்சாலைகள் மட்டுமே காரணம் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், சிப்காட் அதிகாரிகளும் தான் இதற்கு முழு காரணம். தொடர்ந்து பல ஆண்டுகளாக கழிவுநீர் அளந்து பார்த்தால் 8 ஆயிரம் டிடிஎஸ், இதனை அளந்து பார்த்தால் 16 ஆயிரம் டிடிஎஸ் வரும் என்று ஆய்வகத்தில் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை நாளான இன்றும் கூட சிப்காட் பகுதியில் இருந்து கழிவுநீர்கள் ஓடி வருகிறது. மக்கள் போராட்டம் நடத்தியும் அரசு அதிகாரிகளும் அரசும் விழித்துக் கொள்ளவில்லை. புது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மட்டும் போதாது, இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். சிப்காட் பகுதியில் மக்களுக்கு புற்றுநோய் உண்டாகினால் அதற்கு இங்கு இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளே முழு காரணம். மக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் பொறுப்பு மட்டும் இல்லை, அவர்கள் தான் கொலை செய்துள்ளார்கள் என்று கூறலாம்.

பல போராட்டத்திற்கு பிறகு தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. பொது சுத்திகரிப்பு நிலையத்தில் திடக்கழிவுகள் தொட்டி தொட்டியாக கிடைக்கிறது. இதனை என்ன செய்யலாம் என்று கூட தெரியாமல் இருக்கிறது.
இங்கு இருக்கும் திடக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள திடக்கழிவுகள் ஒரு வார காலத்திற்குள் இங்கிருந்து குமுடி பூண்டுடிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஒருபுறம் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் மற்றொருபுறம் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தவறு செய்கின்றன.
ஒரு ஆளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால், மற்றொரு முறை 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு பெருந்துறை சிப்காட் பகுதிகளை மூட வேண்டும். கரோனா களத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இங்கு இருக்கும் தொழில் நிறுவனங்கள் மூட வேண்டும்.

கோடி கோடியாக நிதி ஒதுக்கீடு செய்தாலும் கூட பொதுசுத்திகரிப்பு நிலையம் விரைவில் வந்துவிடாது. புது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வரை தொழில் நிறுவனங்கள் செயல்படக் கூடாது. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். நான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கண்டிருப்பேன்.

இனிமேல் இந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகளை குடும்பத்துடன் இங்கு தங்க வைத்தால் தான் மக்கள் படும் அவதி அவர்களுக்கு தெரியும். இரவு பகலாக கழிவுநீரை தடுத்து நிறுத்தும் பணியில் அரசு அதிகாரிகள் செயல்படவில்லை, அவர்களுக்கு பதிலாக ஊர் மக்கள் செயல்பட்டு வருகின்றன.

சிப்காட் பகுதியில் தண்ணீர் மட்டும் மாசடையவில்லை, காற்றும் மாசடைந்துள்ளது. குறிப்பாக கரி சுண்ணாம்பு துகள்களால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. பெருந்துறையை உதாரணம் காட்டி கொங்கு மண்டலத்தில் சிப்காட்டுகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர். கடந்த 112 நாட்களாக போராடும் மக்களுக்கு நன்றி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆரோக்கிய மந்திர்' ஆகும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்..! திடீர் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு!

ABOUT THE AUTHOR

...view details