சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேட்டில் இருந்து டிப்பர் லாரியில் ஆனந்தராஜ் என்பவர் செம்மண் பாரம் ஏற்றிக் கொண்டு, சிவியார் பாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன் கோயில் எதிரே வந்த வாகனத்துக்கு, வழிவிடுவதற்கு லாரியைச் சற்று ஓரமாக திருப்பியபோது, லாரி நிலை தடுமாறி சாலையோர மின் கம்பத்தின் மீது மோதியது.
டிப்பர் லாரி மின் கம்பம் மீது மோதி விபத்து - மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு! - Tipper truck accident at Satyamangalam
ஈரோடு: சத்தியமங்கலத்தில் செம்மண் பாரம் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Tipper Larry accident electricity pole, டிப்பர் லாரி மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது
லாரி மோதியதில் மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
தகவலறிந்து உடனடியாக வந்த நெடுஞ்சாலைத் துறை காவல் துறையினர், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் மின்கம்பம் உடைந்து விட்டதால் அதனைப் புதிதாக நடும் பணியில் மின் வாரிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!