ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணடிபாளையம் சிங்கம்பேட்டை, முகாசிப்புதூர் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் சார்பில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நீதிமன்ற அறிவுறுத்தல்படியே பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு- சுற்றுச்சூழல் அமைச்சர் - பட்டாசு வெடிக்க அனுமதி
ஈரோடு: தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார்.
time for exploding firecrackers as per court instruction said state Environment Minister
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வருகின்ற தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று கடைபிடிக்கவேண்டிய மற்ற வழிமுறைகள் அனைத்தும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படும். சீனப் பட்டாசுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.