தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோரத்தில் ஜாலியாகப் படுத்து ஓய்வெடுத்த புலி! - ஈரோடு மாவட்டம் செய்திகள்

சாலையோர வனப்பகுதியில் ஜாலியாக படுத்து ஓய்வெடுத்த புலியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜாலியா படுத்து ஓய்வெடுத்த புலி
ஜாலியா படுத்து ஓய்வெடுத்த புலி

By

Published : Jun 11, 2021, 10:34 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சுமார் 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூன்.11) சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம், கொள்ளேகால் செல்லும் சாலையில் உள்ள கெத்தேசால் வனப் பகுதியில், சாலையோரத்தில் இந்த வனப்பகுதியில் புலி ஒன்று படுத்திருந்துள்ளது. அச்சமயம், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் புலி படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் புலி படுத்திருந்த காட்சியை புகைப்படம் எடுத்தனர்.

அப்போது படுத்து உறங்கிக் கொண்டிருந்த புலி மெதுவாக எழுந்து திரும்பி புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுப்பது போல் உட்கார்ந்திருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் ஜாலியாக அமர்ந்திருந்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது புலியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க:இனி வண்டலூர் பூங்காவில் 3 மனிதக் குரங்குகள்...குட்டி மனிதக் குரங்கை ஈன்றெடுத்த தாய்!

ABOUT THE AUTHOR

...view details