ஈரோடு:பவானி அருகே சித்தோடு, நீலிக்கரடு, ராயப்பம்பாளையம், புதூர் பகுதியில் உள்ள வீட்டில் சிலர் மருத்துவரின் பரிந்துரை இன்றி மருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய டெபன்ட்டால் எனப்படும் மாத்திரைகளை போதைக்காக வைத்திருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட எஸ்.பி தனிப்படை அமைத்து விசாரித்து, மூன்றாவது குற்றவாளியையும் கைது செய்தனர்.
முன்னதாக சித்தோடு போலீசார் வீடுகளில் மருத்துவரின் மருத்துவச்சீட்டு பரிந்துரை இன்றி போதைக்காக மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகளை வைத்து இருந்த குற்றத்திற்காக, கடந்த 6ஆம் தேதி சித்தோடு போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், வினீத் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.