நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் தனது மனைவி தங்கமணி, மகன் பிரனீத் ஆகியோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இருசக்கர வாகனத்தில் ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆனைக்கல்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.