ஈரோடு,மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. தாளவாடி, அருள்வாடி, பனக்கள்ளி,மாதள்ளி,திகனாரை தொட்டகாஜசனூர், சிக்கள்ளி, இக்களூர் மற்றும் கல்மண்டிபுரம் வனப்பகுதியில் மழை கொட்டி நீர்த்தது. இந்த மழையால் 5 க்கும் மேற்பட்ட ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி சுற்று வட்டாரத்தில் சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பீம்ராஜ்புரத்தில் இருந்து சூசைபூரம் செல்லும் தரைப்பாலம், சிமிட்டஹள்ளியில் இருந்து மாதள்ளி தரைப்பாலம், தாளவாடி கும்பாரகுண்டி தரைப்பாலம் என 5 க்கும் மேற்பட்ட தரைப்பாலங்களில் வெள்ளம் கரைபுண்டு ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சாலையில் உள்ள தரைப்பாலங்களில் செந்நிற மழைநீர் பாலத்தை மூழ்கடித்த படி சென்றதால் மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.