தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில் யூரியா கலந்து கடமானை கொன்ற வழக்கில் மூன்று கைது - தண்ணீரில் யூரியா கலந்து கடமான் கொலை

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனக்குட்டை தண்ணீரில் யூரியா கலந்து கடமானை கொன்ற வழக்கில் மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்

arrest
arrest

By

Published : Apr 9, 2021, 8:49 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபையனூர் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து வனத்துறையினர் ரேந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மண் குட்டை என்ற இடத்தில் கடமான் உடலை கத்தியால் அறுத்துக் கொண்டு இருந்தவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதில் மூன்று பிடிப்பட்டனர். இருவர் தப்பியோடினர்.

கடமானை கொன்ற வழக்கில் மூன்று கைது

பிடிப்பட்ட மூன்று பேரிடம் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ராமபையனூரை சேர்ந்த ரங்கசாமி, நாராயணசாமி, பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இவர்கள் செம்மண் குட்டை என்ற வன குட்டையில் யூரியாவை கலந்து அந்த தண்ணீரை குடித்த கடமான் இறந்ததும் அதன் உடலை கடத்த முயன்றதாக வனத்துறையினரிடம் அவர்கள் கூறினர். இதையடுத்து வனத்துறையினர் கடமானின் உடலை கைப்பற்றி மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய மூர்த்தி, சதீஷ் குமார் ஆகியோரை வனத்துறை தீவிரமாக தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details