தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் சீட் குறித்துப் பேச இது தருணமல்ல - எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் - Election Seat

ஈரோடு: தேர்தல் சீட் குறித்துப் பேச இது சரியான தருணம் அல்ல என அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்
பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்

By

Published : Nov 9, 2020, 5:35 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தலுக்கானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே தேர்தல் சீட் குறித்துப் பேச வேண்டிய தருணம் இதுவல்ல. அதற்கானப் பணிகள் தொடங்கிய பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து மாவட்டவாரியாக ஆய்வு செய்து தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். கட்சியில் எனக்குப் பொறுப்பு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், தன்னுடைய தொகுதியில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை முறையாகச் செய்வேன்" என்று கூறினார்.

அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

ABOUT THE AUTHOR

...view details