ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி நேற்றுடன் (ஏப்ரல்.15) முடிவடைந்தது. இதனால் இன்று (ஏப்ரல்.16) கரோனா தடுப்பூசி முகாம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை பவானி அரசு மருத்துவமனையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.