தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரசுப் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்! - அரசுப் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழ்நாட்டில் தற்போது, அரசுப் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன்
கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Sep 22, 2020, 4:55 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் அம்மா நடமாடும் நியாய விலை கடை வாகனங்கள் திறப்பு விழா நடைபெற்றது. நடமாடும் நியாய விலை கடை வாகனங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

அதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்திலிருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மருத்துவ ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது சாதனையாகும்.

வரும் ஆண்டில் 50 பள்ளிகள் நடுநிலையிலிருந்து மேல்நிலையாகவும், தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாவும் உயர்வு பெறும். தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் இறுதிவரை நடைபெறும். தற்போது, 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்ப்படும். 15 இடங்களில் தொடக்கப்பள்ளிகளும் 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:'மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' - ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details